தமிழ் சினிமாவின் களவாணி படத்தின் பிரபலமானவர் தான் நடிகர் விமல். இப்படத்தின் வெற்றியின் மூலம் பல படங்களில் நடித்தார்.

அதேப்போல் ஓவியாவும் செம்ம ட்ரெண்ட் ஆனார். இந்த படத்தில், விமலுக்கு தங்கையாக நடித்தவர் தான் மனிஷா பிரியதர்ஷினி. இந்த பெண் சின்னத்திரை தொடர்களில் தற்போது நடித்து வருகிறார்.

மனிஷா நடிப்பு மட்டுமின்றி, படிப்பிலும் கவனத்தை செலுத்தி வருகிறார். சட்டப்படிப்பு முடித்துள்ள அவர் அதில் முதல்வகுப்பில் தேறியுள்ளார்.

தனது தாயின் கனவை நிறைவேற்ற அவர் கலெக்டராக சிவிஸ் சர்வீஸ் தேர்வு பயிற்சியில் இருக்கிறார். இதனால் இதற்கான பயிற்சி கட்டணம் கட்ட முடியாமலும், புத்தகங்கள் வாங்க முடியாமலும் தவித்து வந்தார்.

இதுகுறித்து, கேள்விப்பட்ட நடிகர் ஜெய் மனிஷாவை அழைத்து அவரது ஆர்வத்தை பாராட்டி, அவருக்கான கல்வி செலவை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

By Spyder

You missed