கர்ப்பமாக இருக்கும் சிவகார்த்திகேயன் மனைவி !! வெளிவந்த புகைப்படம் !! உச்சகட்ட மகிழ்ச்சியில் !!ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தனது திறமையாலும், விடா முயற்சியினாலும் இன்று புகழின் உச்சத்தில் அமர்ந்திருக்கும் நடிகர்.

இவர் நடிக்கும் அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியும் பெறுகிறது.

சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கிய இவர் தன்னுடைய திறமையால் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளார். இவரது நடிப்பில் அடுத்ததாக டாக்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்கி உள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய மனைவியுடன் இணைந்து நேற்று சட்டமன்ற தேர்தலுக்கு ஓட்டுப்போட வருகை தந்திருந்தார்.

சிவகார்த்திகேயன் மனைவியின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவர் கர்பமாக இருக்கிறாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் பலர் சிவாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.