80 மற்றும் 90 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகை ராதிகா சரத்குமார். இவர் கிழக்கே போகும் ரயில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை பாரதிராஜா இயக்கியுள்ளார்.

மேலும், நடிகை ராதிகா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழித்  திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரைப் போன்று மக்கள் மத்தியில் 80 மட்டும் 90 களின் கொடிகட்டி பறந்தவர்  தான் நடிகை ஸ்ரீபிரியா.

இவர் கிட்டத்திட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பழமொழிகளில்  இதுவரை 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சில ஆண்டுகளுக்கு முன்பாக தொகுப்பாளனி  டிடி என்கின்ற திவ்யதர்ஷினி நடத்திய ஒரு  நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள்.

அப்பொழுது ரஜினி நண்பர் ஆனால் கமல் டார்ச்சர் என்று நடிகை ஸ்ரீபிரியா கூறியுள்ளார். மேலும், கமல்ஹாசன் நான் மயக்கம் போட்டு விழுந்தாலும் அவர் எளிதாக கண்டுபிடித்து விடுவார் என்று  கூறியுள்ளார். அதற்கு நடிகை ராதிகா எனக்கு பிரஷர் பிரச்சனை இருப்பதால் அடிக்கடி பி பி வந்து விடும்.

அதனால் மயக்கம் போட்டு விழுந்து விடுவேன். இதை தெரிந்த கமல் என்னிடம் இப்போ மயக்கம்  போட்டு விழு நான் வெளியில் போகணும் என்று கெஞ்சுவார். ஆனால், என்னால் முடியாது என்று  கூறியுள்ளார். அதன் பிறகு மற்றொரு நாள் பிபி வந்து மயக்கம் போட்டு விழுந்து விடுவேன்.

அப்போது எழுந்து பார்க்கும் போது கமல் என்னிடம் வந்து சனியனே சொல்லும் போது எதுவும் செய்யாதே என்று காமெடியாக திட்டுவார் என்று அந்த பேட்டியில் அவர் கூறியுள்ளார். அந்த வீடியோ பதிவு தான் தற்போது இணைய தளங்களில் மிக வைரலாக பரவி வருகின்றது…

By marvel

You missed