நடிகர் கமல் நேற்று விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பல்வேறு விஷயங்கள் பற்றி பேசினார். அந்த விழாவில் விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
மேடையில் பேசிய சிம்பு அரசியல், சினிமா என பல விஷயங்கள் பற்றியும் பேசினார். அப்போது சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் பற்றியும் அவர் ஒரு விஷயம்சொன்னார். அதை கேட்டு பலரும் ஆச்சர்யம் ஆனார்கள்.
நான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது என்னை சந்திக்க சிம்புவின் அப்பா டிஆர் வந்தார். திடீரென என்னை கட்டிப்பிடித்து அழ தொடங்கிவிட்டார். எதோ மோசமான சம்பவம் நடந்துவிட்டது என நான் நினைத்துவிட்டேன்.
என்னால் எப்படி சினிமா இல்லாமல் இருக்க முடியும் என்று தான் அவர் கண்ணீர் விட்டிருக்கிறார் என கமல் மேடையிலேயே கூறினார்.