கனிகா..

இயக்குனர் சுசி கணேசன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 5 ஸ்டார் இந்த திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை கனிகா. கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட இவர் வரலாறு எதிரி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

முக்கியமாக நடிகர் அஜித் நடிப்பில் வெளியான வரலாறு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படம் காட்பாதர் என்ற பெயரில் தான் முதலில் உருவானது.

ஆனால் அந்த தலைப்பை ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் இந்த படத்தின் தலைப்பை வரலாறு என மாற்றியது. இந்த படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றவர் நடிகை கனிகா.

தமிழைவிட இடங்களில் மலையாள மொழிப் படங்களில் அதிகம் நடித்திருக்கும் இவர் கடந்த 2008ஆம் ஆண்டு என்னுடைய நண்பரும் நீண்ட நாள் காதலருமான ஷியாம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இவருக்கு ஒரு மகனும் இருக்கிறார். அவ்வப்போது திரைப் படங்களில் தலைகாட்டி வரும் இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

By marvel

You missed