தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா, தொடர்ந்து ரஜினி, விஜய், அஜித் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

நானும் ரவுடி தான் படத்தில் பணிபுரிந்த போது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கு நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

நீண்ட வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் திருமணம் செய்துக்கொண்டனர்.

திருமணத்திற்கு பின் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்கள், திருமணம் சார்ந்த விருந்தினர்கள் புகைப்படம் வீடியோகளை வெளியிடுவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்து இருந்தது.

அதன் படி கடந்த நாளில், திருமணத்தின்போது எடுத்த வீடியோ காட்சிகள் அடங்கிய புரோமோவை வெளியிட்டது.இந்நிலையில், தற்போது வெளியான தகவலின்படி, கணவர் விக்னேஷ் சிவன் சமைத்த உணவை சாப்பிட்ட நயன்தாரா வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்பின்னர் அவரை உடனடியாக மருத்துவனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.சிகிச்சைக்கு பின் நயன் நலமாக இருப்பதாகவும் வீடு திரும்புயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

By Spyder

You missed