கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா கரிமண்ணூரைச் சேர்ந்தவர் சுஜாதா.இவர் தனது வீட்டில் கடந்த வியாழன் அன்று அதிகாலை 4 மணியளவில் கழிவறைக்கு சென்றார்.கழிவறையில் இருந்து தனது மனைவி வர தாமதம் ஆகவே, அவரது கணவர் கழிவறையின் கதவை தட்டியுள்ளார்.

ஆனால், அந்த பெண் கதவை திறக்க மறுத்து விட்டார்.உடனே, அவரது கணவர் கதவை உடைத்து கழிவறைக்குள் சென்றுள்ளார்.அங்கு அவரது மனைவி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். உடனே தனது மனைவியை தொடுபுழாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.அங்கு அவருக்கு சிகிச்சையளித்த டாக்டர்கள் அந்த பெண் சிறிது நேரத்திற்கு முன் குழந்தை பெற்றெடுத்துள்ளதாக அந்த பெண்ணின் கணவரிடம் கூறியுள்ளனர்.

மேலும் இது குறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.உடனே மருத்துவமனைக்கு விரைந்து வந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரித்ததில் தான் குழந்தை பெற்று உடனே வாளி நீரில் மூழ்கடித்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளார் என்ற பெண்ணுக்கு கடந்த 10ம் தேதி இரவு குழந்தை பிறந்துள்ளது.

பிறந்த உடனே குழந்தையை வாளி நீரில் மூழ்கி கொலை செய்துள்ளார்.மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், சுஜாதா தான் கர்ப்பமாக இருப்பது கணவர் மற்றும் உறவினர்களுக்கு தெரியாது என்பதால் குழந்தையைக் கொலை செய்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து, சுஜாதா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனால் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

By marvel

You missed