தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டு 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள். தாங்கள் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.

மகன்கள் யாத்ரா, லிங்காவை தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார் ஐஸ்வர்யா. தனுஷ் அவ்வப்போது சென்று தன் மகன்களை அழைத்து வருகிறார்.

அப்படி அவர் தன் மகன்களுடன் இசைஞானி இளையராஜாவின் நிகழ்ச்சிக்கு சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. மேலும் தன் மூத்த மகனுடன் ஊட்டியில் எடுத்த புகைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தனுஷுக்கு தான் மகன்கள் மீது எவ்வளவு பாசம் என பலரும் பாராட்டினார்கள்.

பதிலுக்கு ஐஸ்வர்யா தன் மகன்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து வெளியிட, அதை பார்த்த சமூக வலைதளவாசிகள் அவரை விளாசினார்கள்.

இந்நிலையில் தனுஷுக்கு கன்டிஷன் போட்டிருக்கிறார் ஐஸ்வர்யா என்று கூறப்படுகிறது. அதாவது மகன்களை அழைத்துச் சென்றால் அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்கக் கூடாது. அப்படியே எடுத்தாலும் அது வெளியே வரக் கூடாது என்றாராம்.

இந்த கன்டிஷனை ஏற்காவிட்டால் மகன்களை பார்க்க அனுமதிக்க முடியாது என்று ஐஸ்வர்யா கறாராக கூறினாராம். மகன்களை பார்க்கும் ஆசையில் ஐஸ்வர்யாவின் கன்டிஷனை ஏற்றுக் கொண்டார் தனுஷ் என்று கூறப்படுகிறது.

By Spyder

You missed