ஒரு வேலை சோறுக்கு கூட ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன்..!! சொந்த நிலம் இருந்தா கூட அதுல விவசாயம் பண்ணிருப்பேன்..!! பிரபல முன்னணி நடிகரின் பரிதாப நிலை..!!

தமிழ் சினிமாவில் துணை நடிகர்களாக வலம் வருபவர்கள் அனைவரும் அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதில்லை என்றே சொல்லலாம் . மேலும் அவ்வாறு கோலிவுட் துறையில் முன்னணி நடிகர்கள் படங்களில் நடிக்கும் ஒரு சில துணை நடிகர்களுக்கு மட்டுமே ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. மேலும் அந்த வகையில் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருக்கும் நடிகர்களில் ஒருவரான தல அஜித் அவர்கள் நடித்து வெளியான வீரம் படம் மக்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

மேலும் அப்படத்தில் பல முன்னணி தமிழ் சினிமா பிரபலங்கள் நடித்து இருப்பார்கள். மேலும் அதில் தம்பி மயில்வாகனமாக நடித்து இருப்பவர் நடிகர் அப்புக்குட்டி. இவர் அந்த கதாப்பாத்திரத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அவரின் உண்மையான  பெயர் சிவபாலன். இவர் தமிழில் வெளியான வெண்ணிலா கபடி குழு மற்றும் அழகர் சாமியின் குதிரை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் அப்புக்குட்டி அவர்கள் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் இறுதியாக நடித்த படம் வாழ்க விவசாயி. அதன் பின்னர் இவருக்கு எந்த ஒரு படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது பட வாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார். வாடகை வீட்டில் வசித்து வரும் அப்புக்குட்டி இந்த கொரோனா இரண்டாம் அலையில் பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே அப்புக்குட்டி கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் என் சொந்த ஊரில் கூட எனக்கு விவசாய நிலம் கிடையாது. என்னுடைய பெற்றோர்கள் விவசாயத்தில் கூலி தொழில் செய்பவர்கள். எங்களுக்கு விவசாய நிலம் இருந்து இருந்தால் விவசாயம் செய்தோ அல்லது ஆடு மாடு மேய்த்தோ என்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து இருப்பேன். ஆனால் நான் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவன். ஒரு வேலை சோறுக்கு கூட நான் ரொ ம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் என கூறியுள்ளார்.

By marvel

You missed