தமிழ் சினிமாவில் ஒன்று இரண்டு படங்களில் நடித்துவிட்டு காணாமல் போன நடிகைகள் பலர் உள்ளனர்.அந்தவரிசையில் ஒரு லிஸ்ட் எடுத்தால் 10 இடங்களுக்குள் இருப்பார் நம்ம விஜயலக்ஷ்மி.

தமிழில் சென்னை 28 படத்தின் மூலம் பிரபலமான விஜி பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார். ஆனால் இந்த நிகழ்ச்சிகள் கடைசி வரை செல்லாமல் வெளியே வந்தார்.

ஆனால் சமீபத்தில் வெற்றிகரமாக முடிவடைந்த சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைத்து சவால்களையும் சந்தித்து இறுதியில் ஒரு கோடி பரிசினை தட்டிச் சென்றார்.

விஜயலக்ஷ்மி தனது பள்ளி பருவ தோழரான பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கின்றார்.

சமூகவலைத்தளங்களில் பல காணொளிகளை வெளியிட்டு வரும் இவர், தற்போது நடனமாடும் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனை அவதானித்த பெண் ஒருவர் இந்த ஆட்டம் தேவையா ஒரு அம்மாவா இருக்க என்று கருத்து தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் கருத்திற்கு பதில் அளித்த விஜயலட்சுமி ‘அப்போ அம்மா ஆனா மூலைல உக்காந்து அழனுமா? என்று சரமாரியாக பதிலடி கொடுத்துள்ளார்.

இந்நிலையில் விஜய லஷ்மிக்கு பிக்பாஸ் அனிதா ஆதரவு தெரிவித்து பதிவ ஒன்றினை வெளியிட்டுள்ளார். ‘அம்மாகளுக்கு மட்டுமல்ல, திருமணமான அனைத்து பெண்களுக்கும் இது பொருந்தும். நமக்கு கிடைக்காத சுதந்திரம் இவங்களுக்கு எப்படி கிடைக்கலாம் என்பது தான் விஷயமே.

வருத்தமான விஷயம் என்னவென்றால், இது போன்ற கேள்விகளுக்கு ஆதரவு தெரிவிக்கவும் சிலர் இன்னமும் இருக்கின்றனர் என்று பதிவிட்டுள்ளார் அனிதா.

பிக்பாஸ் அனிதா 4வது சீசனில் கலந்து கொண்டு மக்களிடையே நல்ல பெயரை வாங்கிய நிலையில், ஆனால் அல்டிமேட்டில் கலந்து கொண்டு பலரது வெறுப்பினை சம்பாதித்து உண்மை முகத்தினை தெரியப்படுத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vijayalakshmi Ahathian (@itsvg)

By Spyder

You missed