தென்னிந்திய சினிமாவில் 1970ம் ஆண்டு தொடங்கி 2000 ஆண்டு வரை பிரபலமாக நடித்து வந்தவர் ஸ்ரீவித்யா. புகழ் பெற்ற நடிகையான இவர் எல்லா முன்னணி நடிகர்களுடனும் சேர்ந்து நடித்துள்ளார். கர்நாடக இசை பாடகி எம்.எல். வசந்தகுமாரியின் மகள் தான் இவர். சினிமா வாழ்க்கையில் ஜொலித்திருந்தாலும் சொந்த வாழ்க்கையில் கடும் கஷ்டத்தையே இவர் சந்தித்துள்ளார்.
1976ம் ஆண்டு ஜார்ஸ் தாமஸ் என்பவரை திருமணம் செய்த நடிகை 1980ல் விவாகரத்து பெற்றார். பின் தனியாக வாழ்ந்து வந்த இவர் 2003ம் ஆண்டு மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்டார். பின் சிகிச்சை பலன் இன்றி 2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார்.
ஏராளமான சொத்துக்கு சொந்தக்காரியான நடிகை ஸ்ரீவித்யா தனது சொத்துக்கள் ஏழை, எளிய மக்களுக்கு போய்ச் சேர வேண்டும் என மரண படுக்கையில் இருக்கும் போது சொத்துக்கள் அனைத்தையும் எழுதி வைத்து விட்டு அவருக்கு நம்பிக்கையான ஒருவரிடம் பொறுப்புகள் அனைத்தையும் கொடுத்துள்ளார்.
ஆனால் இதில் என்ன சோகம் என்ன என்றால் அவரது கடைசி ஆசை நிறைவேறவே இல்லையாம். அவரது சொத்துக்கள் எதுவும் ஒரு ஏழைக்கு கூட போய் சேரவில்லை என்கின்றனர்.