எப்படி எடையை குறைச்சீங்க !! வனிதாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்டு அதிர்ச்சியான ரசிகர்கள் !!

பரபரப்புடனும், பல்வேறு சர்ச்சைகளுடன் நடந்து முடிந்தது பிக்பாஸ் சீசன் 3.மற்ற இரண்டு சீசன்களை காட்டிலும் இந்த சீசன் போட்டியாளர்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது என்றே சொல்லலாம்.நிகழ்ச்சி முடிந்தபின்னர் அவர்கள் செய்யும் செயல்கள் தினந்தோறும் செய்திகளில் இடம்பிடித்து விடுகின்றன.

பல சர்ச்சைகளுக்கு பிறகு முடிந்த இந்த பிக் பாஸ் மக்கள் மனதில் பிடித்த சீசனாக அமைந்தது குறிப்பாக கவின் லாஸ்லியா முகின் தர்சன் என பலர் மக்கள் மனதை வென்றனர்.இருந்தாலும் வனிதா மீரா போன்றோர் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தினர்.அதிகமாக சர்ச்சைகளை ஏற்படுத்தியது வனிதா தான்.

இவர் சொந்த வாழ்க்கையிலும் பல கஷ்டங்களை அனுபவித்து வந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரம்பத்தில் எல்லாருக்கும் எதிரியாகவே காணப்பட்டார். அதுமட்டுமின்றி பார்வையாளர்களும் இவர் மீது வெறுப்பாகவே இருந்தனர்.

அதன் பின்பு அவரது மகள்கள் உள்ளே வந்த தருணத்தில் அவரது தாய் பாசத்தினை அவதானித்த பார்வையாளர்கள் வனிதாவைக் கொண்டாட ஆரம்பித்தனர்.நடிகையான இவர் தனது குடும்ப பிரச்சினை காரணமாக சினிமாவில் வெளிவந்துவிட்டார்.

நட்சத்திர தம்பதிகளாக மஞ்சுளா, விஜயகுமாரின் மகள் தான் வனிதா. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு சில சீரியல்களில் நடித்து வருகின்றார்.மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார்.

 

View this post on Instagram

 

#cookwithcomali

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

வனிதா ஆரம்பகாலங்களில் ஒல்லியாக இருந்தார் ஆனால் இப்போது அவர் குண்டாக இருப்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம்தான். இந்த நிலையில் தற்போது உடல் எடையை பயங்கரமாக குறைத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.இதைப்பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.