சின்னத்திரை மூலமாக வண்ணத்திரையில் காலடி பதித்தவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதில் முக்கிய பங்கு விஜய் டிவியையே சேரும். விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோக்கல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து பின், அந்த பெயரை வைத்தே, வண்ணத்திரையிலும் பிரபலமானவர்கள் உண்டு.
உதாரணத்திற்கு நடிகர் சந்தானம், கலக்கப்போவது யாரு எந்த நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி. பின் காமெடியனாக கலக்கி. இப்போது ஒரு நடிகராகவும் வலம் வந்துள்ளார். அந்த வகையில், சினிமாவின் உச்சிக்கே சென்றது நடிகர் சிவகார்த்திகேயன். காமெடியனாக, களத்தில் இறங்கினாலும் தற்போது முன்னனி ஹீரோக்களில் ஒருவர்.
அதே போல், விஜய் டிவி மூலம் புகழ் பெற்றவர்கள் தான். குக் வித் கோமாளி பாலா, மற்றும் விஜே ரக்சன். அதிலும் சில தினங்களுக்கு முன் விஜய் டிவியில் விஜய் டெலி அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பாலா அவர்களுக்கு விருது கொடுக்கும் போது. அவர் பல அநாதை குழந்தைகளுக்கு உதவி செய்து வருவதாக சொல்லப்பட்டது.
அதை பலரும் பாராட்டினர். அந்த வகையில், விஜே ரக்சன் மற்றும் அவர் நண்பர்கள் இணைந்து ஒரு அமைப்பு ஒன்று நடத்தி வருகின்றனர். அதாவது. பல பேரின் சிறிய சிறிய கனவுகளை நனைவாக்க முயற்சி செய்து வருகிறார்கள். அந்த வகையில், தற்போது ஒரு பெண்ணின் ஆசையை நிறைவேற்றியுள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்த ஒரு பெண், பல வருடங்களாக. ஸ்கூட்டி ஒன்று வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அது அவரின் ஊரிலும், அவர் குடும்ப சூழ்நிலையாலும், அவர்களால், அதை வாங்க முடியாமல் போகியுள்ளது. அதை அறிந்த இவர்களின் அமைப்பு, அவருக்கு உதவ முன்வந்துள்ளனர்.
View this post on Instagram
அந்த வண்டியை வாங்க பாலா உதவியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உதவி சிறியதா? பெரியதா? என்பது வாங்கியவருக்கு தான் தெரியும். இது போன்ற சுவாரசியமான தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்..