என்னது! விஜய் நடிக்க இருக்கும் 67 வது படத்தில் வில்லியாக இந்த மாஸ் ஹீரோயின் நடிக்கிறாரா.? இவர் விஜய்க்கே ஜோடியாக நடிச்சவராச்சே..!! வெளிவந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

கடந்த சில ஆண்டுகளாக சினிமா உலகில் ஏராளமான புதுமுக இயக்குனர்கள் உருவாகிக்  கொண்டிருக்கின்றார்கள். அதிலும் தொடர்ந்து வெற்றியான திரைப்படத்தைக் கொடுத்து வருபவர்களுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி வருகின்றது. அந்த வகையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பவரும் ஒருவர்.

அந்த வகையில் 2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பவர். அந்த திரைப்படத்தைத் தொடர்ந்து  நடிகர் கார்த்தி நடிப்பில் 2019ஆம் ஆண்டு வெளிவந்த கைதி திரைப்படம் மற்றும் 2020ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தை எல்லாம் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படங்கள் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தான் விக்ரம். இந்த திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றது இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக நடிகர் விஜய்யை வைத்து அவரின் 67-வது திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

மேலும், நடிகர் விஜய் தற்போது வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படம்  முடிந்த பிறகு லோகேஷ் உடன் இணைய இருக்கின்றார். மேலும், இந்த திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடிக்க உள்ளதாக வேறொரு தகவலும்  இணைய தளங்களில் மிக வைரளாக பரவி வருகின்றது. ஆனால், இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு  வெளிவந்தால் மட்டுமே இது உண்மையாக இருக்கும் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றார்கள்…

By marvel

You missed