என்னது பல வருடத்திற்கு முன் சிவகார்த்திகேயன் மற்றும் த்ரிஷா இணைந்து விளம்பரத்தில் நடித்துள்ளாரா? அப்படி என்ன விளம்பரம் தெரியுமா...? வைரலான வீடியோ காட்சிகள்!

இன்றைய முன்னணி தமிழ் சினிமா நடிகர்களில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக இருக்கும்  சிவகார்த்திகேயன் அவர்கள் சினிமா துறைக்குள் வருவதற்கு முன்பு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தது நம் அனைவருக்கும் தெரிந்த  ஒன்றே. அதே போல் அவரது வாழ்க்கையை சின்னத்திரையில் ஆரம்பித்து படிப்படியாக மேலே வந்து தற்போது சினிமா துறையில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை தான் பக்கம் வைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன் அவர்கள் ஆரம்ப காலத்தில் விஜய் டிவியில் வெளியான கலக்க போவது யாரு என்னும் ஷோவில் போட்டியாளராக பங்கு பெற்றவர். தற்போது இவர் தமிழ் சினிமாவில் பல பரிமாணங்களில் கலக்கி வருகிறார். இவர் அந்த சமயத்தில் இந்த ஒரு விளம்பரத்தில்  நடித்துள்ளார். கோலிவுட் திரையுலகில் நடிப்பது மட்டுமல்லாமல் இவர் படங்களை தயாரித்தும்  வருகிறார். அதன் பிறகு இவர் பாடல் ஆசிரியராகவும், பாடல்களை பாடியும் உள்ளார்.

இவர் தமிழில் முதல் படமான மெரீனாவில் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார். பின்பு வரிசையாக பல ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். இவர் நடித்து வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமா துறையில் இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை தன் வசப்படுத்தியுள்ளார்.

இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்னர் அந்த நாட்களில் வாய்ப்புகளுக்காக தவித்து வந்தவர். அன்றைய பிரபல நடிகையான த்ரிஷாவுடன் இணைந்து விளம்பர படம் ஒன்றை நடித்துள்ளார்.

அதில் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். அதைக் கண்ட ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.வீடியோ கீழே உள்ளது.

By marvel

You missed