என்னது! நயன்-விக்கி திருமணத்தில் இப்படி ஒரு ஏமாற்றமா? கையை விரித்த நெட்ஃபிளிக்ஸ்! அடுத்தடுத்து வெளியான புகைப்படங்கள்

நடிகை நயன்தாராவின் திருமணத்தில் கலந்த கொண்ட பிரபலங்களின் புகைப்படங்களை விக்கி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகின்றார். நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் திருமணம் கடந்த 9ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது.

குறித்த திருமணத்தில் பல முன்னணி பிரபலங்கள் வருகை தந்து வாழ்த்திவிட்டு சென்றனர். திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூல பையில் நயன்தாரா விக்கி தம்பதிகள் வெள்ளி மற்றும் தங்க பொருட்களை பரிசாக வழங்கியுள்ளனர். தேனிலவிற்கு தாய்லாந்து சென்று வந்த இந்த ஜோடிகள் தற்போது தங்களது வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

நயன்தாரா விக்கி ஜோடிகளின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றாலும், ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்று தான் கூற வேண்டும்.

ஏனெனில் நயன்தாராவின் திருமணத்தினை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கி விட்டதால் அவ்வளவாக புகைப்படங்களை தம்பதிகள் வெளியிடாமல் இருந்தது. தற்போது சில தினங்களாக தங்களது திருமணத்திற்கு வருகை தந்த பிரபலங்களின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகின்றார் விக்கி.

ரஜினி, ஷாருக்கான், சூர்யா மற்றும் ஜோதிகா, விஜய் சேதுபதி இவர்களின் புகைப்படத்தினை வெளியிட்ட நிலையில், தற்போது அனிரூத் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

நயன்தாரா திருமணத்தில் ஒளிபரப்பு உரிமையை பிரபல நிறுவனம் பெரிய தொகையை கொடுத்து வாங்கியது அனைவருக்கும் தெரிந்ததே.. ஆனால் தற்போது நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் கடைசி நேரத்தில் பின் வாங்கி விட்டதால் திருமண புகைப்படங்களை அவ்வப்போது நயன் விக்கி ஜோடிகள் வெளியிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் ரசிகர்கள் குறித்த தகவல் உண்மை இல்லை என்று தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

By marvel

You missed