இன்றைய தேதிப்படி விஜய் டிவியின் Most wanted சீனியர் காமெடியன். அந்த சேனலில் இவர் கலந்து கொள்ளும் ஷோ எதுவாகினும் அதன் TRP வழக்கத்தை விட அதிகரிக்கிறது. அந்த மேஜிக் இன்று வரை தொடர்கிறது.சினிமா சார்ந்த எண்டெர்டெயின்மெண்ட் மீடியாவில், ஜெயிக்கிற குதிரைக்கு மட்டும் தான் மதிப்பு, மரியாதை எல்லாம். அதை கடந்த சில வருடங்கலாகாவே Consistent-ஆக மெயின்டெய்ன் செய்து வருகிறார். ராமர்.

ரோபோ ஷங்கர், வடிவேல் பாலாஜி போன்ற மற்ற விஜய் டிவி சீனியர்களே ராமரின் வருகைக்கு பிறகு Shade ஆக தொடங்கினார்கள் என்பது அந்த சேனலில் பணிபுரியும் Light Boy-க்கு கூட தெரியும். ரோபோ ஷங்கர் அந்த நேரம் சினிமாவில் பிஸியாக தொடங்கியதால் ராமருடன் மோதும் நிலை ஏற்படவில்லை. ஆனால், வடிவேல் பாலாஜி – ராமருடன் இணைந்து ஷோஸ் செய்தார். அதில், ராமர் தான் பல முறை வடிவேல் பாலாஜியை ஓவர்டேக் செய்தார்.

ராமர் வீடு, ராமர் வீட்டு கல்யாணம் என்று விஜய் டிவி ராமரை முன்னிலைப்படுத்தி தனி நிகழ்ச்சிகளே நடத்தப்பட்டது அவரது ஆளுமைக்கு சாட்சி. ஆனால், சினிமாவில் இவருக்கு இதுவரை தனி ஸ்பேஸ் கிடைக்கவில்லை. இளம் வயது நபராக இருந்திருந்தால், நிச்சயம் ஹீரோவின் நண்பனாக பல படங்களில் வலம் வந்திருப்பார். ஆனால், சற்று முதிர்ச்சியான அவரது தோற்றம் அவருக்கான சரியான வாய்ப்பை சினிமாவில் இதுவரை உருவாக்கவில்லை. பட்.. நாம் முன்பே சொன்னது போல், சின்னத்திரையில் இந்த நொடி இவர் தான் கிங்.

ராமரின் சொந்த ஊர், மதுரை அருகில் இருக்கும் மேலூர். இவரின் மனைவி பெயர் கிருஷ்ணவேணி. ராமருக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் என மொத்தம் 3 குழந்தைகள் உள்ளனர். மேற்சொன்ன தகவல்கள் அனைத்தும் சினிமா மற்றும் சின்னத்திரை ரசிகர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால், பலருக்கும் தெரியாத தகவல், ராமர் ஒரு அரசு அதிகாரி என்பது. அதுவும் சாதாரண பதவி அல்ல. VAO. கிராம நிர்வாக அலுவலராக, அரசு ஊதியம் பெரும் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பது பலருக்கும் தெரியாது.

ஆமங்க … ! ராமர் சுக்காம்பட்டி கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் (vao) ஆவர். திரை வாழ்க்கை ஒரு கண் என்றால், மற்றொரு கண் vao எனலாம். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்து வந்து இன்று வாழ்க்கையில் உயர்ந்தவர் என்பதால், சுக்காம்பட்டி கிராமத்தில் இவர் மீது பெரும் மதிப்பு உள்ளது. ஒருபக்கம் பொறுப்பான அதிகாரியாகவும், மறுபக்கம் மக்களை மகிழ்விக்கும் கலைஞனாகவும் இரட்டை குதிரையில் திறம்பட சவாரி செய்து கொண்டிருக்கிறார்.

By marvel

You missed