உங்கள் கணவர் கொடுத்து வைத்தவர் போங்க..” – சீரியல் நடிகை வெளியிட்ட வீடியோ..! – பார்த்து உருகும் ரசிகர்கள்..!

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் மிகப் பிரபலமான வில்லி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஸ்ரீதேவி தற்போது அதே சேனலில் ஒளிபரப்பாகும் பொம்முக்குட்டி அம்மாவுக்கு எனும் சீரியலில் நடித்து வருகிறார்.

இவர் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது கணவருடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். மேலும் இந்த சீரியலில் தூக்கு மாட்டி கொள்வது போன்ற சீன் ஒன்று எடுக்கப்பட்டது.

அந்த சீன் எடுக்கும் போது அவருக்கு தூக்கு போடுவதற்கு அவரது கணவர் உதவினார். எனவே வீடியோவை அவரது மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் உங்கள் கணவர் சூட்டிங் ஸ்பாட்டில் கூட உங்களுக்கு உதவுகிறார்.

நீங்கள் ரொம்ப கொடுத்து வைத்தவர் எனவும், கணவரின் அன்பை ஆத்மார்த்தமாக புரிந்து கொள்ளும் மனைவியாக நீங்கள் இருப்பதால் உங்கள் கணவர் கொடுத்து வைத்தவர் என்று இந்த அழகிய ஜோடியை வாழ்த்தி வருகின்றனர்.

தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.