இறுதி கட்டத்தில் குக் வித் கோமாளி சீசன் 3... அந்த மூன்று வெற்றியாளர்கள் யார் தெரியுமா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்...!!

ஸ்டார் விஜய் மற்றும் disney+ hotstar ஆகிய இரண்டிலும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் சமையலை தாண்டி நகைச்சுவையால் மக்களை ரசிக்க வைத்து வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் செஃப் தாமோதரன் மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகிய இருவரும் நடுவர்களாக இருக்கின்றனர். ஒவ்வொரு வாரமும் பிரபல சமையல் கலைஞர்கள் தங்கள் கோமாளிகளுடன் இணைந்து சமையலை தொடங்குவார்கள். இந்த அணிகளுக்கு அட்வான்டேஜ் டாஸ்க் 1 மற்றும் டாஸ்க் 2 ஆகிய இரண்டு போட்டிகள் கொடுக்கப்படும்.

பின்னர் சிறந்த போட்டியாளர்களுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் வழங்கப்படும். குறைவான மார்க்குகளை எடுத்தவர்கள் எலிமினேஷனும் செய்யப்படுவர்கள்.  முன்னதாக ரக்ஷன் மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வந்த நிலையில் தற்போது ரக்ஷன் மட்டும் தொகுத்து வழங்கி வருகிறார். இரண்டு சீசன்களைக் கடந்து விட்ட இந்த நிகழ்ச்சி தற்போது மூன்றாவது சீசனின் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.

முதல் சீசன் 2020ல் கொரோனா ஊரடங்கு லாக்டவுன் நேரத்தில் மிகவும் பிரபலமடைந்தது. அதை தொடர்ந்து இரண்டாவது சீசன் மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது மூன்றாவது சீசனும் அதே அளவு ஆதரவைப் பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் சிவாங்கி, புகழ் மற்றும் பாலா உள்ளிட்டோர் புகழின் உச்சிக்கு சென்றுள்ளனர். படத்தில் நடிக்கும் வாய்ப்பு கூட கிடைத்துள்ளது. அதோடு குக்குகளுக்கும் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசனில் ஸ்ருத்திகா அர்ஜுன், அம்மு அபிராமி, வித்யூலேகா ராமன், தர்ஷன், சந்தோஷ் பிரதாப், கிரேஷ் கருணாஸ், வேட்டை முத்துக்குமார், ரோஷினி ஹரிப்ரியன், சுட்டி அரவிந்த், அந்தோணி தாசன், மனோபாலா, ராகுல் தாத்தா உள்ளிட்டோர் துவக்கத்தில்  கலந்து கொண்டனர்.

கோமாளிகளாக மணிமேகலை, கே பி ஒய் பாலா, சிவாங்கி ,சுனிதா, முகமது குரேஷி, சத்யராஜ், அருண் ஆகியோர் உள்ளனர். முன்னதாக புகழ், மூக்குத்தி முருகன், பாரத் கே ராஜேஷ், ஷித்தன் கிளாரின், புலி தங்கதுரை, சரத்ராஜ் உள்ளிட்டோரும் கலக்கி வந்தனர். கலகலப்பாக சென்று கொண்டிருந்த குக் வித் கோமாளி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. அம்மு  அபிராமி, விதுல்யா ராமன், தர்ஷன், சந்தோஷ் பிரதாப், கிரேஸ் கருணாஸ் உள்ளிட்டோர் இறுதிப் போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் முதல் மூன்று இடங்களைப்  பிடித்த போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஸ்ருத்திகா முதலிடத்திலும், தர்ஷன் இரண்டாவது இடத்திலும், அம்மு அபிராமி மூன்றாவது இடத்தையும் பிடிப்பார்கள் என கூறப்படுகிறது.

By marvel

You missed