இரண்டாவது திருமணம் செய்து 5 மாதங்களில் குழந்தை பெற்ற பிரபல நடிகை...!! கடும் ஷாக்கில் ரசிகர்கள்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த நடிகை ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து ஐந்தே மாதங்களில் குழந்தை பெற்று உள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை அஞ்சலி நாயர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பிரபலமானவர். இந்த  நிலையில் மலையாளத்தில் ஒரு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர். தமிழில் இவர் அண்ணாத்த, மாமனிதன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது ’எண்ணித்துணிக’ உள்பட 7 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு அனிஷ் என்ற இயக்குனரை திருமணம் செய்து கொண்ட அஞ்சலிநாயருக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அதன் பிறகு 2016ஆம் ஆண்டு தனது கணவரை கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விவாகரத்து பெற்றுக் கொண்டார் அஞ்சலி நாயர்.

அதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் மலையாள படங்களில் உதவி இயக்குனராக பணி புரிந்து வரும் அஜித் ராஜூ என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி 5 மாதங்கள் மட்டுமே ஆகும் நிலையில் தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். அஜித் ராஜூவுடன் திருமணம் செய்வதற்கு முன்னரே அவர் கர்ப்பமாக இருந்துள்ளார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

By marvel

You missed