இன்று சந்தோஷமாக கொண்டாடப்பட வேண்டிய நாள்... ஆனால் மிகுந்த மனவருத்தத்தில் நடிகை மீனா... அவரே பதிவிட்ட பதிவால் கலங்கி தவிக்கும் ரசிகர்கள்..!

யாரும் எதிர்பாராத விதமாக நடிகை மீனாவின் கணவரான வித்யாசாகர் கடந்த மாதம் 28ஆம் தேதி நுரையீரல் பிரச்சினை காரணமாக உயிரிழந்தார். இந்த தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏனெனில் நடிகை மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் கடந்த 2009ம் ஆண்டு தான் திருமணம் நடை பெற்றது. இவர்களுக்கு நைனிகா என்னும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இளம் குடும்பமாக வலம் வந்த இவர்களது வாழ்வில் இப்படி ஒரு சம்பவம் ஏற்பட்டது மகிவும் கடினமான ஒன்றாகவே உள்ளது.

மேலும் நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக கடந்த சில மாதங்களாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். பெங்களூருவில் அவருடைய வீட்டுக்கு அருகே நிறைய புறாக்கள் வளர்க்கப்பட்டு வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட அலர்ஜி சுவாசப் பிரச்சனையாக மாறியுள்ளது.

மேலும் இது ஒருபுறம் இருக்க தன் கணவரின் இறப்பிற்கு பின்னர் முதன் முறையாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார் மீனா. அதில் எனது அன்புக் கணவர் வித்யாசாகரின் இழப்பால் நான் மிகவும் கலவலையடைந்து இருக்கிறேன்.

இந்த தருணத்தில் அனைத்து ஊடகங்களும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்து இந்தச் சூழலுக்கு அனுதாபம் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த விஷயத்தில் இதற்கு மேல் தவறான தகவல்களை வெளியிடுவதை தயவு செய்து நிறுத்துங்கள். மேலும் இந்தக் கடினமான நேரத்தில் எனக்கு உதவி செய்து என்னுடைய குடும்பத்திற்கு பக்க பலமாக நின்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், கடைசி வரை முயன்ற மருத்துவ குழுவிற்கும் முதலமைச்சருக்கும், சுகாதார துறை அமைச்சருக்கும் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் அவர்களுக்கும் என்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகம் மற்றும் என்னுடைய அன்பான ரசிகர்களுக்கு என்னுடைய நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் மீனாவிற்கு இன்று திருமண நாள். இப்படி ஒரு நிலையில் கடந்த ஆண்டு தன் திருமண நாளில் மீனா போட்ட பதிவு வைரலாகி வருகிறது. அதில் தன் கணவர் குறித்து பதிவிட்டுள்ள மீனா ‘என் வாழ்க்கையில் ஒரு வானவில்லாக வந்து அதை வண்ணமயமாக அழகாக்கி விட்டாய். நாம் இணைந்து இருப்பது தான் என்னுடைய அற்புதமான மற்றும் பிடித்தமான இடம். நீ கொடுத்த சிரிப்பை எப்போதும் நான் அணிந்து இருப்பேன். இனிய திருமண நாள் கணவரே என்று பதிவிட்டு இருக்கிறார்.

By marvel