இந்த ராசிக்கார பொண்ணு கிடைச்சா கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணுங்க! வாழ்க்கை சும்மா ஜம்முன்னு இருக்கும் !

காதல் வாழ்க்கை சுமூகமா போகணும்னா கண்டிப்பா விட்டு கொடுத்தல் இருக்கணும். ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்தா இந்த ஜென்மத்துல வேறெந்த சந்தோஷமும் நமக்கு பெரிசா தோணாது.

காதல் எப்பவுமே ரெண்டு வகையான ஆட்கள்தான் இருப்பார்கள். ஒன்று இணையை கட்டுப்படுத்தி கட்டளையிடுபவர்களாக இருப்பார்கள். அல்லது அவர்களுக்கு தோதாக விட்டுக்கொடுத்து வாழ்பவர்களாக இருப்பார்கள்.
ஆணோ, பெண்ணோ இதுபோன்ற குணங்களுடன் இருந்தால் அந்த வாழ்க்கை முழுவதும் இனிக்கும்.

இரண்டு குணமும் ஒருவரிடம் மட்டும் இருந்தாலும் பிரச்னை தான். பொதுவாக பெண்கள் தன் காதலுக்காக நிறைய விட்டுக்கொடுப்பார்கள் என 100% சொல்ல முடியாது. அவர்களுக்கு பிடிவாத குணம் அதிகமாகவே இருக்கும்.

ஆனால் ஒரு சில ராசிக்கார பெண்கள் உண்மையிலேயே நிறைய விட்டுக்கொடுப்பார்கள். எந்தெந்த ராசிக்கார பெண்கள் காதலில் விட்டுக்கொடுப்பார்கள்? எந்தெந்த ராசிக்கார பெண்கள் முட்ட வருவார்கள் என்று பார்க்கலாம்.

ரிஷபம்

ரிஷப ராசி பெண்கள் காதலுக்காக எப்பொழுது மற்ற ராசி பெண்களைவிட அதிகம் விட்டுக்கொடுப்பவர்களாக இருப்பார்கள்.

காதலில் இருக்கும் முழுமையான சந்தோஷத்தை அனுபவிக்க நினைப்பார்கள்.
அதனால் ரிஷப ராசி பெண்கள் சக்தி அல்லாதவர்கள் என்று அர்த்தமல்ல. உண்மையில் அவர்கள் மிகுந்த புத்திசாலிகளாக, சக்தி உடையவர்களாக இருப்பார்கள். இவர்கள் தங்களைவிட தங்களுடய காதலுக்குத்தான் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள். பொறுமைதான் இவர்களின் மிகப்பெரிய சொத்து. இதனால் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்வார்கள்.

மிதுனம்

காதலை பொறுத்தவரை மிதுன ராசி பெண்கள் திடீரென முடிவெடுக்க விரும்ப மாட்டார்கள். காதலில் எப்பொழுதாவதுதான் இவர்களின் அதிகாரம் கொடி கட்டிப் பறக்கும்.

சூழ்நிலைக்கு தகுந்த வாறு இவர்கள் தன்னை மாற்றிக்கொண்டு, காதலனிடமே முடிவெடுக்கும் உரிமையை கொடுத்து விடுவார்கள்.
உண்மையில் காதலனுக்கு அடிபணிந்து இருப்பது இவர்களுக்கு பதட்டம் மற்றும் கவலையில் இருந்து தப்பிக்க உதவும் வழியாகும்.

கன்னி

கன்னி ராசி பெண்கள் காதலை பொறுத்தவரை செயலற்றவர்களாக இருப்பார்கள். மிகுந்த கூச்ச சுபாவம் மிக்கவர்களாக இருப்பதால் இவர்களின் ஆசைகள் செயலற்றதாகவே இருக்கும்.

எப்பொழுது இவர்கள் எடுக்கும் முடிவின் சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் என்னவோ முடிவெடுக்கும் உரிமையை இவர்கள் தன் துணைக்கு கொடுத்து விடுவார்கள்.

அப்படி இருக்கும்போது கூட மகிழ்ச்சியாக இருப்பார்கள். பணிவு தான் தன்னுடைய நேர்மைக்கா அடையாளம் என்று இவர்கள் கருதுவார்கள்.

துலாம்

உறவில் மாற்றங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் துலாம் ராசி பெண்கள். இவர்கள் சிறந்த ராஜதந்திரிகள். அதனால் தான் என்னவோ முடிவெடுக்கும் நிலைமையை காதலனுக்கே விட்டு விடுவார்கள்.

இவர்கள் காதலில் அடிபணிந்து போக மாட்டார்கள். தன்னுடைய சரியான நேரத்திற்காக காத்திருப்பார்கள். இவர்களால் காதலில் எந்த பிரச்னையும் ஏற்படாது என்று உறுதியாக கூறலாம்.

மீனம்
எப்பொழுதும் மீன ராசி பெண்கள் தங்கள் துணைக்கு அடிபணிந்து இருப்பதை விரும்புவார்கள். தங்களுடைய காதலை சக்தி வாய்ந்தவராக உணர வைப்பதிலும், அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் மிகுந்த அக்கறை செலுத்துபவர்களாக இருப்பார்கள்.

இவர்கள் தங்களின் துணைக்கு கொடுக்கும் உரிமைதான் தங்கள் காதலை நிரூபிக்கும் வழி என்று இவர்கள் நினைப்பார்கள்.

இவர்கள் பெண்கள் தன்னலமற்றவர்களாகவும், அதிக இரக்கம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இதனாலேயே இவர்களின் காதலர்கள் இவர்கள் மேல் அதீத அக்கறை காட்டுவார்கள்.