“இந்த நடிகையுடன் தான் கைலாசாவில் செட்டில் ஆகணும்” !! நடிகர் ஹரிஷ் கல்யாணின் ஆசை !! அந்த நடிகை யார் தெரியுமா ??

சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி ஆனவர் ஹரிஷ் கல்யாண்.இவருக்கு அந்த திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.அதன்பிறகு தமிழ் பிக்பாசில் களம் புகுந்தார்.அவர் வாழ்க்கையை மாற்றிய ஒரு நிகழ்ச்சி பிக் பாஸ் என்றே சொல்லலாம்.

யாருக்கும் தெரியாமல் இருந்த ஹரிஷ் கல்யாண் வெளியே தெரிய ஆரம்பித்தது இந்த நிகழ்ச்சிக்கு பின்னர்தான்.அதிலும் ரைசாவுடன் இவர் அடித்த கூத்து மற்றும் இவர் செய்த ரொமான்ஸ் அவருக்கு பெரிய பிரபலமாக்கியது.

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் இவர் அதிகமான படங்களில் கமிட்டானார்.குறிப்பாக இவரும் ரைசாவும் இனைந்து நடித்து யுவன் சங்கர் ராஜ இசையில் வெளியான பியார் பிரேமா காதல் திரைப்படம் அதிரிபுதிரி ஹிட்டடித்தது.

மேலும் இவர் நடிப்பில் தொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்,தனுஷு ராசி நேயர்களே மேலும் தெலுங்கில் ஜெர்சி போன்ற திரைப்படங்கள் வெளிவந்தன.அனைத்து படங்களும் நல்ல ஹிட் கொடுத்தன.தற்போது கையிலும் அதிகமான படங்கள் வைத்துள்ளார் ஹரிஷ் கல்யாண்.

இந்தநிலையில் தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் அங்கு கேட்கப்பட்ட கேள்விக்கு அசத்தலான பதில் ஒன்றை கூறியுள்ளார்.அந்த நிகழ்ச்சியில் நீங்கள் கைலாஸா செல்ல வேண்டுமென்றால் யாருடன் செல்வீர்கள் என்று கேட்டதற்கு அவர் கூறிய பதில்தான் இப்போது சோசியல் மீடியா ட்ரெண்டிங்.

அவர் ராஷ்மிகா மந்தனாவுடன்தான் செல்வேன் அவர்தான் கியூட்டாக இருக்கிறார் என்று பதிலளித்துள்ளார்.மேலும் அவர் அந்த நடிகையுடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.