அவன் இவன் படத்தில் போலீசாக நடித்த நடிகர் திடீர் மரணம்.... இவர் அரசு ஊழியரா...? யார் தெரியுமா...? திரையுலகினர் அதிர்ச்சி..!

அவன் இவன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்  நடித்த, நடிகர் ராம்ராஜ் உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம், திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 72 வயதாகும் இவர் உடல்நல குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது திடீர் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இவரது உடல் அவரது சொந்த ஊரான முதுகுளத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டு, குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலிக்கு பின்னர், இன்று மாலை இறுதி சடங்குகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி மேலாளரான இவர், தன்னுடைய பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சினிமாவில் நடிக்க துவங்கினார். முதல் படத்திலேயே பாலாவின் பட வாய்ப்பு கிடைத்தது இவரது அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். இதை தொடர்ந்து நடித்த படங்கள் பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், அவன் இவன் இவரது மாஸ்டர் பீஸ் என்று கூறும் அளவிற்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றார். தற்போது இவரது திடீர் மரணத்திற்கு தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலம் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

By marvel