பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக கிசுகிசுக்கப்படுபவர்கள் நடிகை பாவனி மற்றும் நடன இயக்குனர் அமீர்.
நடிகை பாவனி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர்.
மேலும், தற்போது பாவனி – அமீர் இருவரும் இணைந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆடி வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள நிகழ்ச்சியில் நடுவர் ரம்யா கிருஷ்ணன் முன், பாவனி I Love You என்று கூறிவிட்டார் அமீர்.
இந்நிலையில், இந்த வாரம் ஒளிபரப்பு ஆகவுள்ள நிகழ்ச்சியின் ப்ரோமோவில், அமீர் குறித்து கேள்வி எழுப்பியபோது, “எனக்கு அமீர் பிடிக்கும், ஆனால் கொஞ்சம் டைம் வேணும்” என்று கூறியுள்ளார் பாவனி. இதன்முலம் விரைவில் இருவரும் திருமணம் நடக்குமா என்று பலரும் கிசுகிசுத்து வருகிறார்கள்.