அதிசார குருப்பெயர்ச்சி பலன்கள்; 12 ராசிக்கும் காத்திருக்கும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் என்னென்ன? பலனும் பரிகாரமும்..!

குரு பார்வை கோடி நன்மை என் சொல்லிற்கு ஏற்ப இந்த குருப்பெயர்ச்சி ஒருசில ராசிக்கு சிறப்பாக இருக்கும். அப்படி எந்தெந்த ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

மேஷம்

மேஷம் ராசிக்கு இதுவரை ஒன்பதில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் குரு. பெயர்ச்சிக்கு பிறகு பத்தாமிடம் செல்வது உகந்த இடமல்ல.

தொழில் மாற்றம் உத்யோகத்தில் சில பிரச்சனை ஆகுதல். இடையூறு போன்றவைகளை சந்திக்க வேண்டிய வரும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கு இதுவரை எட்டாமிடத்தில் சஞ்சரித்து வந்த குரு, பெயர்ச்சிக்கு பிறகு ஒன்பதாம் இடத்திற்கு செல்வது சிறப்புதான்.

குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும். ஆன்மீகப் பணியில் ஈடுபடுவார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்.

மகர ராசியிலிருந்து ஐந்தாம் பார்வையாக பார்க்கிறார். இந்த பெயர்ச்சி ரிஷபராசிக்கு பொன்னான காலம் என்றே கூறலாம்.

மிதுனம்

மிதுனம் ராசியினர் தைரியஸ்தானம். இதுவரை ஏழில் இருக்கும் குரு பெயர்ச்சிக்கு பிறகு எட்டாமிடம் செல்வது நல்லதல்ல.

காரியத்தடை ,பொருளாதார நெருக்கடி, தொழில் மந்தம், உடல்நலம் பாதிப்பு, கடன்தொல்லை, எடுத்த காரியம் தோல்வியில் முடியும்.

கடகம்

கடகம் ராசியினருக்கு மாத்ரூ ஸ்தானம் சுக ஸ்தானம் இதுவரைஆறில் சஞ்சரிக்கும் கு்ரு பெயர்ச்சிக்கு பிறகு ஏழாமிடம் செல்வது சிறப்புதான்.

தடைகள் அகன்று வெற்றிமேல் வெற்றி கிட்டும் கூட்டுத்தொழில் அமோக லாபம் கிடைக்கும்.சொத்து சேர்க்கை ஏற்படும்.

வெளியூர்களுக்கு பயணம் செல்வார்கள். மணமாகதவர்களுக்கு நல்ல வரன் அமையும். மகர ராசியிலிருந்து ஏழாம் பார்வையாக பார்க்கிறார் அதுவே சிறப்புதான்.

சிம்மம்

சிம்மம் ராசியினருக்கு பூர்வபுண்ணியஸ்தானம் ஐந்தாமிடத்தில் இருக்கும் குரு சிறப்பு தான் பெயர்ச்சிக்கு பிறகு ஆறாமிடத்தில் சஞ்சரிக்கிறார்.

டென்ஷன் ஏற்படும். எதிரி உண்டு, நோய் உண்டு ஆரோக்கியம் கெடும். வீண் பழிக்கு ஆளாவர். கடன் தொல்லை ஏற்படும்.

கன்னி

கன்னி ராசியினருக்கு சத்துரு ஸ்தானம் ராசிக்கு இதுவரை நான்கிலே வீற்றிருந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு ஐந்தில் பிரவேசிக்கப்போவது சிறப்பு.

திருமணம் ஆகாதவர்களுக்கு நல்லவரன் அமையும், குழந்தைகளால் மகிழ்ச்சி, புதிய முயற்சிகளில் வெற்றி, அரசு வழியில் ஆதாயம் ஏற்படும்.

துலாம்

துலாம் ராசியினருக்கு நீதிக்கும் நேர்மைக்கும் பெயர்போனது. துலாம் ராசிக்கு இதுவரை மூன்றாமிடத்தில் இருக்கும் குரு பெயர்ச்சிக்கு பிறகு நான்காமிடத்தில் வருகின்ற குருவால் இடமாற்றம் வெளியூர் மாற்றம், உத்யோக மாற்றம் ஏற்படவாய்ப்பு.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு இதுவரை இரண்டில் இருந்த குரு நன்மைகள் செய்தது சிறப்புதான். பெயர்ச்சிக்கு பிறகு மூன்றாமிடம் செல்வது சிறப்பல்ல.பொருளாதார நெருக்கடி, புதியமுயற்சிகளில் முட்டுக்கட்டை ஏற்படும்.

தனுஷ்

தனுசு ராசிக்கு இதுவரை ஜென்மத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த குரு.பெயர்ச்சிக்கு பிறகு இரண்டாம் இடத்திற்கு வரும் குரு நல்லதை செய்வார் தனம் கிடைக்கும். செல்வம் செல்வாக்கு சேரும். பணம் நிறைய வரும்.

மகரம்

மகர ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கும் குரு பெயர்ச்சிக்கு பிறகு ஜென்மத்திற்கு வருவது நல்லதல்ல உடல்நலம் பாதிக்கும் அலைச்சல் அதிகரிக்கும். குழம்பிய மனதோடு பல காரியங்களை செய்யத் தூண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்கு பதினொன்றில் சஞ்சரித்து வந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு பன்னிரெண்டில் வரும் குரு நிறைய பணம் விரயம் ஆகும்.

தேவையில்லாத விஷயங்களில் சிக்கிக் கொள்வது. டென்ஷன் அதிகரிக்கும். எதைத் தொட்டாலும் தடைஏற்படும்.

மீனம்

மீன ராசிக்கு இதுவரை பத்தாமிடத்தில் இருந்த குரு பெயர்ச்சிக்கு பிறகு பதினொன்றில் வருவது லாபம் ஏற்படும் சிறப்புதான். அனுகூலமாக இருக்கும்.

பரிகாரம்;

ஒருவருடைய ஜாதகத்தில் குரு சரி இல்லாவிட்டாலும் சரி பெயர்சியின் பலன் சரி இல்லையென்றாலும் குருவின் ஸ்தலமான ஆலங்குடிக்கு சென்று வருவது சிறப்பாக இருக்கும்.

மேலும், அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்துவர 9 ஏழைகளுக்கு அன்னதானம் செய்வது உத்தமம்.

ஒவ்வொரு வியாழக்கிழமை தோறும் சிவாலயம் சென்று அங்குள்ள தட்சணாமூர்த்தியை வணங்கி வர உத்தமம்.

நவக்கிரகங்களில் வியாழ பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி வர உத்தமம். சித்தர் சமாதியை வணங்கி வர உத்தமம். கோயில்களுக்கு கொண்டைக்கடலை வாங்கி கொடுக்கலாம்.

ராசியினரின் முக்கிய பரிகாரம்;

மேஷ ராசிக்காரர்கள் வியாழக்கிழமை இரவு பத்து கை அளவு கொண்டைக் கடலை எடுத்து தலையனைக்கு கீழ் வைத்து மறு நாள் எடுத்து ஒடுகிறதண்ணீரில் போட்டுவிட குருவின் அருள் கிடைக்க ஏதுவாகும்.

மிதுனம் ராசியினர் 8 கொண்டைக் கடலை அல்லது 8 கையளவு எடுத்து இரவு தூங்கும் பொழுது தலையணைக்கு கீழ் வைத்து மறுநாள் காலையில் ஓடுகிற தண்ணீரில் போட்டுவிட உத்தமம்.

சிம்மம் 6 கையளவு கடலை எடுத்து மேல்கூறியது போல் செய்யவும்.

துலாம் 4 கையளவு கடலை

விருச்சிகம் 3 கையளவு கடலை

மகரம் ஒரு கையளவு கடலை

கும்பம் 12 கையளவு அல்லது 12 எண்ணம் கடலை எடுத்து பேப்பரில் மடித்து தலையனைக்கு கீழ் வைத்து மறுநாள் காலையில் எடுத்து ஓடும் தண்ணீரில் விடவும்.

இந்த பரிகாரத்தை வியாழன் தோறும் செய்துவர உத்தமம். வியாழக்கிழமை தோறும் விநாயகரை 16 முறை வலம் வர உத்தமம். முக்கியமாக அருகம்புல் சாற்றுதல் அவசியம்.