அட மீனாவை இந்த பிரபல நடிகை கொல்ல துடித்தாரா...? ஏன் தெரியுமா...? பல வருடங்கள் கழித்து உண்மையை உளறிய சம்பவம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பிறகு ஹீரோயினாக பல வெற்றிப் படங்களில் நடித்தவர் தான் நடிகை மீனா. 90s கால கட்டத்தில் இவரை பிடிக்காத நபர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு மீனா மிகவும் பிரபலமானார். கடந்த 2009ம் ஆண்டில் வித்யாசாகர் என்பவரை மீனா திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவரின் முழு அனுமதியோடு படங்களில் நடித்தும் வந்தார். தன் மகள் நைனிகாவையும் படத்தில் நடிக்க வைத்தார்.

இதனையடுத்து அண்மையில் மீனாவின் கணவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இச்சம்பவம் மீனாவையும் அவரது குடும்பத்தையும் மட்டுமின்றி இந்திய திரையுலகினர்களையும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. இந்நிலையில், அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் நடித்த சோனியா போஸ், நடிகை மீனா குறித்து சில விஷயங்களை பகிர்ந்துகொண்டிருக்கும் தகவல் வாயடைக்க வைத்திருக்கிறது.

அதாவது, மீனாவும், நானும் அந்த படத்தில் இணைந்து ஒன்றாக நடித்தோம். அப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் சேர்ந்து நான் பல காட்சிகளில் நடித்திருந்தேன். ஆனால், படம் வெளியான  பிறகு பார்த்தால் என்னுடைய காட்சிகள் எதுவும் வரவில்லை. மீனாவும், ரஜினியும் ஒன்றாக இணைந்து நடித்த காட்சிகள் மட்டும் தான் அதிகமாக வந்திருந்தது. இதனால் எனக்கு மீனாவின் மீது அதிக கோபம் ஏற்பட்டது. அந்த கோபத்தினால் அவரை கொன்று விடலாம் என்று கூட எனக்கு தோன்றியது.

அதற்குக் காரணம் சூப்பர் ஸ்டாரை எனக்கு மிகவும் பிடிக்கும். அப்படி இருக்கும் போது அவருடன் நான் நடித்த காட்சிகள் இடம் பெறாமல் மீனாவுடன் நடித்த காட்சிகள் மட்டுமே வந்தது எனக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது.

இதனால் சிறிது நாட்கள் நான் மீனாவின் மீது கோபமாக இருந்தேன் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார் சோனியா. பல வருடத்திற்கு பிறகு கூறியிருக்கும் இந்த தகவல் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

By marvel