அட நடிகர் விக்ரமுக்கு நிஜமாக என்னதான் ஆச்சு...! உண்மையிலேயே அவருக்கு மாரடைப்பா..? அவரது மேனேஜர் கொடுத்த தகவல்!!

நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு அற்புத கலைஞர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் இவர் தனது கடின உழைப்புக்காக பெயர் பெற்றவர். ஆக்ஷன் காட்சிகள், காதல் காட்சிகள் என சாதாரணமாக படங்கள் நடித்து ஹிட் கொடுத்து விட்டு செல்லாமல் படத்துக்கு படம் ஏதாவது வித்தியாசத்தை காட்ட விரும்புபவர் நடிகர் விக்ரம். சேது, பிதாமகன், காசி, ஐ என படங்களின் கதாபாத்திரத்திற்காக அவர் எடுத்த ரிஸ்க், வேறு எந்த நடிகரும் நினைத்துக் கூட பார்க்க முடியாதது.

தற்போது கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகியப் படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் கோப்ரா படத்தில் விக்ரம் 20 கெட்டப்புகளில் வருவதாக சொல்லப்படுகிறது. மறுபுறம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்துள்ளார் விக்ரம்.

இவரைப் பற்றி இன்று அதிர்ச்சியான செய்தி ஒன்று வந்தது. அது என்னவென்றால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி தான். இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அவர்விரவில் குணமடைய வேண்டும் என இணையத்தில் பதிவிட்டனர்.

தற்போது நடிகர் விக்ரமின் மேனேஜர் தனது டுவிட்டர் பக்கத்தில், விக்ரம் அவர்களுக்கு மார்பில் கொஞ்சம் வலி ஏற்பட்டது அவ்வளவு தான். செய்தியில் வந்தது போல் மாரடைப்பு எல்லாம் இல்லை. விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது  அவர் நன்றாக தான் இருக்கிறார், அவரது குடும்பத்திற்கு நாம் இப்போது தனிமையை கொடுக்க வேண்டும் என பதிவு செய்துள்ளார்.

By marvel

You missed