அடேங்கப்பா!! 20 நிமிஷ காட்சியில் நடித்த அந்த நடிகைக்கு 9 கோடியை அள்ளிக் கொடுத்த தயாரிப்பாளர்!! யார் அந்த நடிகை தெரியுமா...? இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர் தான்…

இன்றைய கால தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் ராஜமவுலி. “நான் ஈ” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சில படங்களை இயக்கிய பின் பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தினை இயக்கினார். அந்தப்படம் பல ஆயிரம் கோடி வசூலை பெற்றுக் கொடுத்தது. மேலும் அந்த பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்த ஆர் ஆர் ஆர் என்ற படத்தினை இயக்கி முடித்துள்ளார்.

மேலும் இப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்த்து இருந்த போது கொரோனா லாக்டவுனால் இரு மாதங்கள் தள்ளி வைத்து அதன் பின்னர் அந்தப் படம் வெளியானது. இந்த படத்தின் மார்க்கெட் கோடிக்கணக்கில் வசூலானதால் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

அனால் தற்போது இந்த படத்தில் நடித்த அஜய் தேவ்கன், ஆலியா பட் ஆகிய பாலிவுட் பிரபலங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுத்துள்ளனர் என்ற செய்தி இணையத்தில் வெளியாகியுள்ளது. நடிகர் அஜய் தேவ்கன் சில காட்சிகளில் கோமியோ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதிலும் 7 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பிற்கு வந்து நடித்து கொடுத்தார். அதில் நடித்து கொடுத்ததற்காக 35 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார். அவரைப் போல 20 நிமிடம் மட்டுமே வரும் நடிகை ஆலியா பட்டிற்கு சுமார் 9 கோடி சம்பளமாக கொடுத்துள்ளார்களாம். என்ன இருந்தாலும் பாலிவுட் மார்க்கெட்டிற்காக இப்படி கொடுத்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா…? இது ரொம்ப ஓவர் தானே…

By marvel