அடடே சரண்யா பொன்வண்ணனின் மகள்களா இது ? மூத்தமகளுக்கு நடந்த நிச்சயதார்த்தம் ! மாப்பிள்ளை யாருன்னு தெரியுமா ??

இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் அம்மா கேரக்டர் என்றாலே சரண்யா பொன்வண்ணன் தான் நினைவுக்கு வருவார். நாயகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர் இப்போது அம்மா கேரக்டர்களுக்கு அழகூட்டி வருகிறார்.

பல முன்னணி நடிகர்களுக்கும் அம்மாவாக நடித்து அம்மணியில் கால்ஷீட் கிடைப்பதே இப்போதெல்லாம் குதிரை கொம்பு ஆகிவிட்டது. அதுமட்டும் இல்லாமல் சரண்யா பொன்வண்ணனை அம்மா கேரக்டருக்கு அழகாக காட்டிய படம் ‘எம்டன் மகன்’ அதன் பின்னே அவருக்கு அம்மா ரோல்கள் வரிசை காட்டியது.

சரண்யா, வில்லன் மற்றும் குணச்சித்திரப் பாத்திரத்தில் நடிக்கும் பொன்வண்ணனைத் திருமணம் செய்துள்ளார். இந்தத் தம்பதிகளுக்கு பிரியதர்ஷினி, சாந்தினி என இருமகள்கள் உள்ளனர். இதில் சாந்தினுக்கு அண்மையில் நிச்சயதார்த்தம் சென்னையில் வைத்து நடந்தது.

கொரோனா நேரம் என்பதால் நெருங்கிய சொந்தங்களை மட்டுமே அழைத்து நிச்சயத்தை முடித்திருக்கிறார்கள். தொடர்ந்து திருமணத்தை பெரிதாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர். நிச்சயதார்த்த மேடையில் மணமகனோடு சரண்யா பொன்வண்ணன் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.