தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை இலியானா. இவர் இதற்கு முன் தமிழில் வெளியான சில திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் தமிழில் பெரிதும் பட வாய்ப்புகள் இவருக்கு வரவில்லை. இதனால் தெலுங்கு மற்றும் ஹிந்தி திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்த துவங்கினார் நடிகை இலியானா. அங்கு அவருக்கு நல்ல நல்ல படங்களில் வாய்ப்புகள் கிடைத்து முன்னணி கதாநாயகி ஆனார்.
மேலும் இந்நிலையில் நடிகை இலியானா ஆண்ட்ருஸ் என்பவரை சில ஆண்டுகள் காதலித்து வந்துள்ளார். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகியுள்ளார்களாம். இதனால் கர்ப்பமான நடிகை இலியானா தனக்கு நெருங்கிய மருத்துவரை வைத்து கருவை கலைத்து விட்டாராம். இதன் பின் காதலருடன் ஏற்பட்ட சண்டையால் இருவரும் பிரிந்து விட்டார்களாம்.
இதனால் பல வருடங்களாக பூட்டி வைத்திருந்த இந்த ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் இதெல்லாம் உண்மையில்லை பொய் என முற்றிலும் மறுத்துள்ளார் நடிகை இலியானா.