நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் இரவின் நிழல். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர், பிரகிடா, ரேகா நாயர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகை ரேகா நாயர் ஒரு காட்சியில் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக நடித்திருந்தார்.

இதில் எந்த கதாபாத்திரமும் முகம் சுளிக்கும் அளவுக்கு ஆபாசமாக இல்லை என்று பலரும் பாராட்டி வருகின்றனர். இதற்கு ரேகா நாயரும் பல யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். இந்நிலையில், இவரை பற்றி பேசி சர்ச்சை கருத்தை கூறும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் ரேகா நாயரை கிழிகிழி என கிழித்துள்ளார்.

அதாவது, ஒரு நடிகையாக ஒரு சீன் நடிக்க சொன்னா குழந்தைக்கு பால் கொடுக்க இரு மார்பகமும் தெரிந்தாலும் ஓகே என என கூறியதாகவும் அந்த படத்தின் ஒரு காட்சிக்கு 24 டேக்குகள் எடுக்கப்பட்டதாகவும், அப்போது பார்த்திபனை குழந்தை பாணியில் முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி இவர் யார் என பார்த்தால் தற்கொலை செய்து கொண்ட சீரியல் நடிகை சித்ராவின் தோழி தான். அப்போதே சக தோழி போதை பழக்கம் உடையவர் என குற்றம் சாட்டி பேசினார் அப்போ அவர் எப்படிப்பட்ட தோழியாக இருக்கும் என பயில்வான் ரங்கநாதன் விமர்சித்தார்.

இதனிடையே, சென்னை திருவான்மியூர் பீச் ரோட்டில் பயில்வான் ரங்கநாதனை சந்தித்து திட்டிய ரேகா நாயர் என்னை அசிங்கமா பேச என்ன உரிமை இருக்கு என திட்டியுள்ளார். மேலும், உன் மனைவிய நான் என்னை எப்படி பேசலாம் என திட்ட நீ நிர்வாணமா நடிச்ச என பயில்வான் ரங்கநாதனும் பதிலுக்கு சாடியுள்ளார்.

அதன்பின்னர், செருப்பு பிஞ்சிடும் பார்த்துக்கோ என திட்ட இன்னும் மோசமாக பேசியுள்ளார் ரேகா நாயர் இந்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

By marvel

You missed